Google Docsஸில் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த யோசனைகளை உருவாக்குங்கள்
எந்தச் சாதனத்தில் இருந்தும் நிகழ்நேரத்தில் ஆன்லைன் ஆவணங்களை உருவாக்கலாம், அவற்றில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம்.
எங்கிருந்தும் தடங்கலின்றி இணைந்து பணியாற்றுங்கள்
எளிதாகப் பகிர்தல் அம்சத்தின் மூலம் நிகழ்நேரத்தில் அனைவரும் சேர்ந்து திருத்தலாம். தடங்கலின்றிப் பணியைத் தொடர கருத்துகள், பரிந்துரைகள், பணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அல்லது, ஆன்லைன் Docsஸில் அனைவருடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்ற @-குறிப்பிடல்களைப் பயன்படுத்தி தொடர்புடைய நபர்கள், ஃபைல்கள், நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உள்ளமைந்த நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக எழுதுங்கள்
விரைவாக எழுதும்போது ஏற்படக்கூடிய பிழைகளைக் குறைக்க ஸ்மார்ட் கம்போஸ் போன்ற உதவிகரமான அம்சங்கள் துணைபுரியும். இதனால் எழுத்துப்பிழை குறித்து அதிகம் யோசிக்காமல் உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்தலாம். எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை தொடர்பான பரிந்துரைகள், குரல் டைப்பிங், விரைவாக ஆவணத்தை மொழிபெயர்த்தல் போன்ற அம்சங்களின் மூலம் நேரத்தைச் சேமிக்கலாம்.
உங்களின் பிற Google ஆப்ஸுடன் தடங்கலின்றி இணையுங்கள்
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உங்கள் விருப்பத்திற்குரிய பிற Google ஆப்ஸுடன் Docs இணைக்கப்பட்டுள்ளது. கருத்துகளுக்கு நேரடியாக Gmailலில் இருந்தே பதில் அளிக்கலாம், Google Sheetsஸில் இருந்து விளக்கப்படங்களை உட்பொதிக்கலாம், Google Meet மூலமாக எளிதில் பகிரலாம். அதுமட்டுமல்லாது, தொடர்புடைய உள்ளடக்கமோ படங்களோ உள்ளனவா என Docsஸில் இருந்தபடியே இணையம் அல்லது Google Driveவில் நேரடியாகத் தேடலாம்.
கூட்டுப்பணி செய்வதற்கான அம்சத்தையும் நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் பிற ஃபைல்களிலும் பயன்படுத்துங்கள்
Microsoft Word ஃபைல்களின் வடிவத்தை மாற்றாமலேயே ஆன்லைனில் அவற்றை எளிதாகத் திருத்தலாம். அத்துடன் பணிகள், ஸ்மார்ட் கம்போஸ் போன்ற Docsஸின் மேம்பட்ட கூட்டுப்பணி செய்வதற்கான & உதவிகரமான அம்சங்களையும் பயன்படுத்தலாம். மேலும், PDF ஃபைல்களை உடனடியாகத் திருத்தும் வகையில் பதிவேற்றம் செய்யலாம்.
செருகு நிரல்கள் மூலம் அதிகமானவற்றைச் செய்யுங்கள்
Docsஸில் இருந்தே பல மூன்றாம் தரப்பு ஆப்ஸை அணுகலாம். டிஜிட்டல் கையொப்ப ஆப்ஸாக இருந்தாலும் திட்டப்பணி மேலாண்மைக்கான கருவியாக இருந்தாலும், Docsஸில் அதை விரைவாகத் திறக்கலாம்.
சமீபத்திய உள்ளடக்கத்தில் வேலை செய்யுங்கள்
Docsஸைப் பயன்படுத்தி எப்போதும் ஆவணத்தின் சமீபத்திய பதிப்பில் வேலை செய்யலாம். அத்துடன், செய்யப்படும் திருத்தங்கள் இதுவரையான பதிப்புகளில் தானாகவே சேமிக்கப்படுவதால் செய்த திருத்தங்களை எளிதில் பார்க்கலாம், வேண்டுமென்றால் அவற்றைச் செயல்தவிர்க்கலாம்.
ஆஃப்லைனில் இருக்கும்போதும் வேலை பாருங்கள்
இணைய இணைப்பு இல்லாமலேயே Docsஸை அணுகலாம் உருவாக்கலாம் திருத்தலாம். இதனால் எங்கிருந்தும் நீங்கள் வேலை செய்யலாம்.
பாதுகாப்பு, இணக்கத்தன்மை மற்றும் தனியுரிமை
இயல்பாகவே பாதுகாப்பானது
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக மேம்பட்ட மால்வேர் பாதுகாப்பு முறைகள் உட்பட தொழில்துறையில் சிறந்து விளங்கும் பாதுகாப்பு முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். Docs என்பது கிளவுட் சார்ந்ததாகும். எனவே ஃபைல்களைச் சாதனங்களில் சேமிக்கத் தேவையில்லை, அத்துடன் சாதனங்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவாகவே இருக்கும்.
அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் தரவு என்கிரிப்ஷன் செய்யப்படுகிறது
Google Driveவில் பதிவேற்றப்படுகின்ற அல்லது Docsஸில் உருவாக்கப்படுகின்ற ஃபைல்கள் அனைத்தும் அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன.
ஒழுங்குமுறைத் தேவைகளைப் பின்பற்றுவதற்கான இணக்கத்தன்மை
Docs உட்பட எங்கள் தயாரிப்புகளின் பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கக் கட்டுப்பாடுகள் ஆகியவை தனிப்பட்ட முறையில் காலமுறைப்படி சரிபார்க்கப்படுகின்றன.
தனியுரிமைக்கென வடிவமைக்கப்பட்டது
Google Cloudன் மற்ற நிறுவனச் சேவைகள் கடைப்பிடிக்கும் அதே கடுமையான தனியுரிமை உறுதிப்பாடுகளையும் தரவுப் பாதுகாப்புகளையும் Docs கடைப்பிடிக்கிறது.
உங்கள் தரவிற்கான கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும்.
Docs உள்ளடக்கத்தை ஒருபோதும் நாங்கள் விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் மூன்றாம் தரப்புகளுக்கு விற்க மாட்டோம்.
உங்களுக்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறியுங்கள்
Google Docs என்பது Google Workspaceஸின் ஒரு பகுதியாகும்
ஒவ்வொரு திட்டத்திலும் அடங்குபவை
தனிப்பட்ட உபயோகத்திற்கு (கட்டணமில்லை) |
Business Standard$12 USD
பயனர் ஒருவருக்கு மாதத்திற்கு. 1 வருடம்
தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் அல்லது மாதாந்திர பில்லிங் என்றால் பயனர் ஒருவருக்கு மாதத்திற்கு $14.40 |
|
---|---|---|
Docs, Sheets, Slides, Forms
உள்ளடக்க உருவாக்கம் |
||
Drive
பாதுகாப்பான கிளவுட் சேமிப்பகம் |
ஒரு பயனருக்கு 15 ஜி.பை. |
ஒரு பயனருக்கு 2 டெ.பை. |
உங்கள் குழுவிற்கான பகிர்ந்த இயக்ககங்கள் |
||
Gmail
பாதுகாப்பான மின்னஞ்சல் |
||
பிசினஸிற்கான பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி |
||
Meet
வீடியோ & குரல் கான்ஃபிரன்ஸிங் |
100 பங்கேற்பாளர்கள் |
150 பங்கேற்பாளர்கள் |
மீட்டிங் ரெக்கார்டிங்குகள் Driveவில் சேமிக்கப்பட்டன |
||
நிர்வாகி
மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் |
||
குழு அடிப்படையிலான பாதுகாப்புக் கொள்கைக் கட்டுப்பாடுகள் |
||
வாடிக்கையாளர் உதவி சேவைகள் |
சுயமாக உதவி பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் சமூக மன்றங்கள் |
24/7 ஆன்லைன் உதவி மற்றும் சமூக மன்றங்கள் |
எங்கிருந்தும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கூட்டுப்பணி செய்யுங்கள்
மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற எதிலிருந்து வேண்டுமானாலும் எங்கிருந்தும் உங்கள் ஆவணங்களை (ஆஃப்லைனில் இருந்தால்கூட) அணுகலாம் உருவாக்கலாம் திருத்தலாம்.
டெம்ப்ளேட்களுடன் பயன்படுத்தத் தொடங்குங்கள்
வேலையை விரைந்து தொடங்க பல்வேறு டாஷ்போர்டுகள், திட்டப்பணிக்கான டிராக்கர்கள் மற்றும் தொழில்முறை ரீதியில் வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
மேலும் டெம்ப்ளேட்களுக்கு Docs டெம்ப்ளேட் கேலரிக்குச் செல்லுங்கள்.